search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டு பிளிசிஸ்"

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மார்கிராம் 21 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு ஹசிம் அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அம்லா 61 பந்தில் 65 ரன்களும், டு பிளிசிஸ் 69 பந்தில் 88 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

    வான் டெர் டஸ்சன் 40 ரன்களும், டுமினி 22 ரன்களும், பெலுக்வாயோ 25 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 26 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தென்ஆப்பிரிக்கா அணியும் எங்களால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க இயலும் என்பதை நிரூபித்துள்ளது.

    இதனையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டகாரர் குசல் பெரேரா 0 என்ற முறையிலும் அடுத்து வந்த திருமன்னே 10 ரன்களிலும் குசல் மெண்டிஸ் 37 ரன்களிலும் வெளியேறினார்கள். இந்நிலையில் குனரத்தினேவுடன் மேத்யுஸ்  ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இலங்கை அணி 170 ரன்கள் எடுத்திருந்த போது குனரத்தினே அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து களமிறங்கிய வீரரகள் வந்த வேகத்தில் திரும்பினர். மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தனஜெய டி செல்வா 5, ஜீவன் மெண்டிஸ் 18, ஸ்ரீவர்த்தனா 5, வண்டார்சே 3, லக்மல் 1, என வெளியேற பேரேரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இலங்கை அணி 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அண்ட்லி 4 விக்கெட்டுகளை அள்ளினார். லுங்கி 2 விக்கெட்டும் ரபாடா, தாஹிர், டவினி, டுமினி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன்களாக டு பிளிசிஸ், டுமினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்ஆப்பிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி 22-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 24-ந்தேதியும் நடக்கிறது.

    முதல் போட்டிக்கு டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி இரண்டு டி20 போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டுமினி கடைசி போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 128 ரன்னில் சுருண்டதால் இலங்கையின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் ரபாடா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடித்தார். ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 68 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது.

    டு பிளிசிஸ்-ஐ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 128 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா. 8 பேர் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள். டு பிளிசிஸ் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    தென்ஆப்பிரிக்கா அணி ஒட்டுமொத்தமாக 196 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றால், தென்ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்து தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையைப் படைக்கும்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த பரபரப்பான டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. #SAvSL
    டர்பன்:

    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 235 ரன்களும், இலங்கை 191 ரன்களும் எடுத்தன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஒஷாடே பெர்னாண்டோ 28 ரன்களுடனும், குசல் பெரேரா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியில் ஒஷாடே பெர்னாண்டோ (37 ரன்), அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கபளகரம் செய்தார். இதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு குசல் பெரேராவும், தனஞ்ஜெயா டி சில்வாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டதுடன் அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்தனர். 6-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் திரட்டிய இந்த ஜோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் ‘செக்’ வைத்தார். ஒரே ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வா (48 ரன்), அடுத்து வந்த லக்மல் (0) ஆகியோரை காலி செய்தார். எம்புல்டெனியா (4 ரன்), ரஜிதா (1) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. அப்போது இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 226 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவது உறுதி என்றே நினைக்கத்தோன்றியது.

    இந்த சூழலில் குசல் பெரேரா கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த விஷ்வா பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியை கரைசேர்க்கும் போராட்டத்தில் இறங்கினார். ஸ்டெயின், ரபடாவின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு திகைப்பூட்டிய குசல் பெரேரா, பெரும்பாலும் எதிரணியின் பந்து வீச்சை தானே சந்திக்கும் முனைப்புடன் செயல்பட்டார். இருப்பினும் விஷ்வா பெர்னாண்டோவும் எதிர்கொண்ட பந்துகளை திறம்பட சமாளித்தார். இலக்கை நெருங்கிய போது தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் பதற்றத்திற்கு உள்ளானார். பந்து வீச்சு வியூகங்களை மாற்றி பார்த்தும் பலன் கிட்டவில்லை.

    உச்சக்கட்ட பரபரப்பு, நெருக்கடிக்கு இடையே நம்பிக்கையை தளரவிடாமல் நேர்த்தியாக ஆடிய குசல் பெரேரா, தென்ஆப்பிரிக்காவின் புயல்வேக தாக்குதலை முறியடித்து பிரமாதப்படுத்தினார். கடைசியில் பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இலங்கை அணி 85.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது.

    தனது 2-வது சதத்தை நிறைவு செய்த குசல் பெரேரா 153 ரன்களுடனும் (200 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), விஷ்வா பெர்னாண்டோ 6 ரன்னுடனும் (27 பந்து) களத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். வெற்றிகரமாக இலக்கை துரத்திப்பிடித்த (சேசிங்) டெஸ்ட் போட்டிகளில் 10-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். 1994-ம் ஆண்டு கராச்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் இன்ஜமாம் உல்-ஹக், முஷ்டாக் அகமது ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது. அந்த 25 ஆண்டு கால சாதனையை இலங்கை ஜோடி தகர்த்துள்ளது. தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு கிடைத்த 2-வது வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு இதே மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.
    டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா குயின்டான் டி காக்கின் (80) சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. ஸ்டெயின் (4 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ரன்னில் சுருண்டது.

    44 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளிசிஸ் 25 ரன்னுடனும், டி காக் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். டி காக் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டு பிளிசிஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். டி காக் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 191 ரன்கள் எடுத்திருந்தது.


    5 விக்கெட் வீழ்த்திய அறிமுக வீரர் அம்பல்டெனியா

    கடைசி ஐந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா மேலும் 68 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து 259-ல் ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 44 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், மொத்தமாக இலங்கையை விட 303 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. 2-வது இன்னிங்சில் இலங்கை அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அம்பல்டெனியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

    304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று பகல்-இரவாக ஆட்டமாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 241 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க வீரர் பகர் சமான் 70 ரன்னும், இமாத் ஹசிம் 47 ரன்னும் எடுத்தனர். பிரிடோரியஸ், பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டும், ஸ்டெயின், ரபாடா, முல்டர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் 58 பந்தில் 83 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் டு பிளிசிஸ், வான்டர் டஸ்சன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 50 ரன்கள எடுத்தனர். முகமது அமீர், உஸ்மான் ஷின்வாரி, ‌ஷஹீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.


    டு பிளிசிஸ்

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே 2-வது, 3-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. பாகிஸ்தான் முதல் மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

    அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. முதல் ஆட்டம் கேப்ட வுனில் நாளை நடக்கிறது.
    உலகக்கோப்பை தொடருக்கு சற்றுமுன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் பந்து வீச்சாளர்கள் வேலைப்பளு குறித்து டு பிளிசிஸ் கவலை தெரிவித்துள்ளார். #WorldCup2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிக அளவில பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்களை ஒவ்வொரு அணிகளும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. பணம் அதிக அளவில் கிடைப்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி, மே மாதம் 2-வது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா? வெளிநாட்டில் நடத்தப்படுமா? என்ற கேள்வி ஏற்கனவே உள்ளது.

    இதற்கிடையில் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி நாடுகள் நட்சத்திர வீரர்களுக்கு ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது. மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தானாகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.



    ஐபிஎல் தொடர் முடிவடைந்து இரண்டு வாரத்திற்குள் உலகக்கோப்பை தொடர் வருவதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வேகப்பந்து வீச்சு குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி வருகிறார்.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனான டு பிளிசிஸ் லுங்கி நிகிடி, ரபாடா, கிறிஸ் மோரிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
    3-வது ஒருநாள் போட்டியில் டு பிளிசிஸ், டேவிட் மில்லர் ஆகியோரின் சதத்தால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா #AUSvSA
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்கிராம் 32 ரன்னில் வெளியேறினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 15.3 ஓவரில் 55 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.



    4-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். சதம் அடித்த டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இருவரின் சதத்தால் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது டு பிளிசிஸ் டுமினியை டாஸ் சுண்டச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கினார். #SAvZIM
    தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 போட்டி கடந்த 9-ந்தேதி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. பொதுவாக கிரிக்கெட் போட்டியின்போது போட்டியை நடத்தும் அணியின் கேப்டன் டாஸ் சுண்ட, வெளிநாட்டு அணி கேப்டன் ஹெட் அல்லது டெய்ல் என டாஸ் கேட்பார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருக்கும் டு பிளிசிஸ் கடந்த ஆறு போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், மாறுதலுக்காக ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத டுமினியை டாஸ் சுண்ட அழைத்தார். டுமினி டாஸ் சுண்ட ஜிம்பாப்வே அணி கேப்டன் என்ன விழ வேண்டும் என்ற விருப்பதை தெரிவித்தார்.

    இதில் டு பிளிசிஸ் டாஸ் வென்றார். பொதுவாக ஐசிசி போட்டி நடுவர் பார்வையில் டாஸ் சுண்டப்படும். கேப்டன் வரமுடியாத நிலை ஏற்பட்டால் துணைக் கேப்டன் டாஸ் சுண்டலாம்.

    ஆனால் டு பிளிசிஸ் டுமியை வைத்து டாஸ் சுண்ட வைத்தார். இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நான் என்ன செய்தனோ, அதை விரும்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் சில சுவராஸ்யமான வேடிக்கைகள் நிகழ வேண்டும். அது இங்கே இருந்து தொடங்கியுள்ளது’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். #SAvIND
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இலங்கை அணி பேட்டிங் செய்தபோது, 10-வது ஓவரில் டு பிளிசிஸ் கேட்ச் பிடிக்க முயற்சி செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை.

    இந்நிலையில் தோள்பட்டை காயத்திற்காக 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றம் ஒரெயொரு டி20 போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகியுள்ளார்.

    ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. நாளை 4-வது போட்டி நடக்கிறது.
    இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டுமினி, டு பிளிசிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை ரபாடா (4) மற்றும் ஷம்சி (4) ஆகியோரின் அபார பந்து வீச்சால் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த மார்கிராம் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து டி காக் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 117 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டி காக் 59 பந்தில் பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    டு பிளிசிஸ் 56 பந்தில் 10 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 31 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நடக்கிறது.
    கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்து வீச்சில் சிக்கி 124 ரன்னில் சுருண்டது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் நேர்த்தியாக பந்து வீசி 8 விக்கெட் வீழ்த்தவும், அதேநேரத்தில் இலங்கையின் குணதிலகா (57), கருணாரத்னே (53), டி சில்வா (60) ஆகியோர் அரைசதம் அடிக்கவும் இலங்கை நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா 16 ரன்களுடனும், ஹெராத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெராத், தனஞ்ஜெயா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெராத் 35 ரன்னில் அவுட் ஆக, தனஞ்ஜெயா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 9 விக்கெட் வீழத்தி அசத்தினார்.



    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. தனஞ்ஜெயா, தில்ருவான் பெரேரா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். கேப்டன் டு பிளிசிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் டி காக் 32 ரன்கள் சேர்க்க 34.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 126 ரன்னிலும், 73 ரன்னிலும் தென்ஆப்பிரக்கா சுருண்டது. தற்போது 124 ரன்னில் சுருண்டுள்ளது.
    ×